/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் கால்வாய்களை மறித்து கட்டுமானங்கள்
/
கழிவுநீர் கால்வாய்களை மறித்து கட்டுமானங்கள்
ADDED : ஜூன் 06, 2024 05:51 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்களை தனி நபர்கள்அடைத்து கட்டுமானங்களை எழுப்புவதால் சிக்கல் எழுந்துள்ளது.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் குடியிருப்பு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய, பெரிய கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இக்கால்வாய் வழியாக கடைவீதி உள்ளிட்ட பிரதான கால்வாயில் கலந்து நகரை விட்டு வெளியேறும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழத்தெரு உள்ளிட்ட சில இடங்களில் கழிவு நீர் கால்வாய்களை தனி நபர்கள்அடைத்து வைத்து ஆக்கிரமித்து அதில் கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் கழிவு நீர் தேங்கி குடியிருப்பு வாசிகளுக்கு துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.