/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் தொடர் மழை; நிரம்பும் நீர் நிலையால் மகிழ்ச்சி
/
இளையான்குடியில் தொடர் மழை; நிரம்பும் நீர் நிலையால் மகிழ்ச்சி
இளையான்குடியில் தொடர் மழை; நிரம்பும் நீர் நிலையால் மகிழ்ச்சி
இளையான்குடியில் தொடர் மழை; நிரம்பும் நீர் நிலையால் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 08, 2024 05:33 AM

இளையான்குடி : இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சிக்குஉள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் குண்டு மிளகாய்,பருத்தி மற்றும் நெல் விவசாயம் நடக்கிறது. கடந்த பருவமழையின் போது இப்பகுதியில் போதுமான மழை பெய்யாததால் அறுவடை நேரங்களில் நெல் விவசாயம் பொய்த்து போனது.அதேபோன்று மிளகாய் மற்றும் பருத்தி விவசாயமும் சோடை போனதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அளவுக்கு அதிகமாக அடித்ததை தொடர்ந்து நீர் நிலைகள் வற்றியதால் கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டன.
கடந்த ஒரு வாரமாக கோடை மழை இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்ததால் இளையான்குடி, தாயமங்கலம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கடந்த பருவமழையின் போது போதுமான மழை பெய்யாத காரணத்தினால் இப்பகுதிகளில் நெல் விளைச்சல் இல்லை.
கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் இல்லாமல் நீர் நிலைகள் வற்றிய நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக கோடை மழை தினந்தோறும் பெய்வதை தொடர்ந்து நீர்நிலைகள்நிரம்பி வருவதால் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர்.