/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே கேட் மூடல் அறிவிப்பு செய்ய வலியுறுத்தல்
/
ரயில்வே கேட் மூடல் அறிவிப்பு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2024 05:55 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் தானியங்கி ரயில்வே கேட்களில்பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தில்மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அகலரயில் பாதை உள்ளது.நகருக்குள் வர இந்த அகல ரயில் பாதையை கடந்துதான் வர முடியும்.
திருப்புவனம், புதூர், பிரமனூர், தட்டான்குளம், மணலூர், டி.வேளாங்குளம், ஆவரங்காடு, வெள்ளிகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பாதையில் தானியங்கி ரயில்வே கேட்கள் உள்ளன.குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ரயில்வே கேட்களில் பராமரிப்பு பணி நடப்பது வழக்கம்.
காலை 9:00 மணி முதல் மாலை ஐந்து மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் உள்ளிட்ட யாருமே செல்ல முடியாமல் சிரமத்திற்குஉள்ளாகின்றனர்.
மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணி குறித்து ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே கேட் அருகே பராமரிப்பு பணி நடைபெறும் நாள், கேட் மூடப்பட்டிருக்கும் நேரம் குறித்த பேனர் வைக்கப்படுகிறது. ஆனால் திருப்புவனம் வட்டாரத்தில் எந்த வித அறிவிப்பும் வைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிக்காக கேட் மூடப்படும் போது முன்அறிவிப்பு செய்யவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.