/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையில் கிடந்த நகை: போலீசில் ஒப்படைப்பு
/
சாலையில் கிடந்த நகை: போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கீழரத வீதி விஜயமணி மகன் விக்னேஷ் 33, பெரியார் நகர் சுப்பையா மகன் சீனி 53, இருவரும் டூ வீலரில் நேற்று மதியம் சென்றனர். தம்பிபட்டி சந்தைப்பேட்டை அருகில் செல்லும் போது ரோட்டில் மின்னுவதைப் பார்த்தனர். கீழே கிடந்த நகையை எடுத்து பார்த்தனர். பின்புறம் நகை குறியீடு 916, ஹால்மார்க் இருந்ததால் தங்கம் என்பது தெரிந்தது.
இதனை யாரும் தொலைத்திருக்கலாம் என்று கருதி திருப்புத்துார் போலீஸ் எஸ்.ஐ.,பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் பாராட்டினர்.