ADDED : ஜூலை 31, 2024 04:25 AM
தேவகோட்டை, : தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்த வெள்ளி வட்டம் என்ற இலக்கிய அரங்க தொடக்க விழா கல்லுாரி முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது. வெள்ளி வட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோ வரவேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் வெள்ளி வட்டத்தின் நோக்கம் பற்றியும் மாணவர்கள் இலக்கிய திறமையை வளர்த்துக் கொள்ள இந்த அமைப்பை ஒரு களமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முன்னாள் வங்கி மண்டல மேலாளர் சபாரெத்தினம் தொடக்கி வைத்தார்.
இயல் என்ற தலைப்பில் மாணவர்கள் பாரதி, நுாருல் குதா பேசினர். இசை எனும் தலைப்பில் மாணவி திவ்யதர்ஷினி பாடினார். நாடக தலைப்பில் மாணவர்கள் ராஜபாரதி செந்தில்குமார் சிலப்பதிகாரத்தை நடத்தினர். மாணவி ஆப்ரின் நிஷா தொகுத்து வழங்கினார்.