/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 31, 2024 04:59 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ படிப்பு வட்டத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும், தன்னார்வ படிப்பு வட்டம் மூலம் ஆண்டுக்கு 1000க்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று செல்கின்றனர். அரசு துறைகளில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டி பட்டதாரிகளை நியமிக்க உள்ளது.
இதற்கான முதற்கட்ட தேர்வு செப்டம்பர் 14 ம் தேதி நடக்க உள்ளது. முதல் நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, தன்னார்வ பயிலும் வட்டத்திலும், கலெக்டர் அலுவலக ஆர்ச் அருகே உள்ள படிப்பு வட்டத்தில் ஜூலை 1 ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.
இம்மையத்தில் பாடவாரியான தேர்வு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.