/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி சேர்க்கை இணையதளத்தில் தரவரிசை பட்டியல், கவுன்சிலிங் தேதி
/
கல்லுாரி சேர்க்கை இணையதளத்தில் தரவரிசை பட்டியல், கவுன்சிலிங் தேதி
கல்லுாரி சேர்க்கை இணையதளத்தில் தரவரிசை பட்டியல், கவுன்சிலிங் தேதி
கல்லுாரி சேர்க்கை இணையதளத்தில் தரவரிசை பட்டியல், கவுன்சிலிங் தேதி
ADDED : ஜூன் 03, 2024 03:06 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி சேர்க்கைக்கான தர வரிசை, கவுன்சிலிங் தேதி விபரங்களை இணையதளத்தில் பார்க்கலாம் என முதல்வர் சுடர்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இக்கல்லுாரியில் மே 28 ல் சிறப்பு பிரிவுக்கான மாணவிகள் சேர்க்கை நடந்தது. ஜூன் 10 ல் அறிவியல் பிரிவான பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், மனையியல், ஜூன் 11 ல் கலைப்பிரிவான வணிகவியல், பி.பி.ஏ., வரலாறு, பொருளியல், ஜூன் 12 ல் தமிழ் மற்றும் ஆங்கிலபாடப்பிரிவுக்கு சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்கில் பங்கேற்க பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10 மற்றும் பிளஸ் 1, 2 மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்று, ஜாதிச்சான்று அசல் மற்றும் தலா 3 நகல்கள், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் உடன் வர வேண்டும். தரவரிசை பட்டியல், கவுன்சிலிங் தேதி விபரங்களை ''https://gacwsvga.edu.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.