/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தம்பிடி காசு கூட தமிழகத்துக்கு வழங்கக் கூடாது: எச்.ராஜா
/
தம்பிடி காசு கூட தமிழகத்துக்கு வழங்கக் கூடாது: எச்.ராஜா
தம்பிடி காசு கூட தமிழகத்துக்கு வழங்கக் கூடாது: எச்.ராஜா
தம்பிடி காசு கூட தமிழகத்துக்கு வழங்கக் கூடாது: எச்.ராஜா
ADDED : ஜூலை 30, 2024 11:53 PM
சிவகங்கை:'தம்பிடி காசு கூட தமிழகத்துக்கு வழங்கக் கூடாது' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை அருகே எம்.வேலாங்குளத்தை சேர்ந்த, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலர் செல்வக்குமார் 52. இவரை ஜூலை 27ல் சிலர் கொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட செல்வகுமார் குடும்பத்தினருக்கு எச்.ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடந்திருக்கின்றன. இதில் அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் என 8 பேர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு, போலீஸ் இருக்கிறது என்ற பயம் குற்றம் செய்பவர்களிடம் இல்லை. கொலைகள் சொந்தக் காரணங்களால் நடந்தது என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார் அமைச்சர் ரகுபதி.
முதல்வரிடம் கட்சியும், அரசுத் துறைகளும் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அவர் உடனடியாக பதவி விலகுவதுதான் தமிழகத்துக்கு நல்லது.
எல்லா குற்றங்களுக்கும் பின்னணி போதைப் பொருட்கள் பயன்பாடு தான். போதைப் பொருட்களில், தி.மு.க., முழுவதும் மூழ்கிப் போய் உள்ளது.
சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் செலவு செய்த கணக்கை, தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்காது; வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.