/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிரான்ஸ்பார்மர் பழுதை கையாளும் கிராம மக்கள் * வேடிக்கை பார்க்கும் மின் அதிகாரிகள்
/
டிரான்ஸ்பார்மர் பழுதை கையாளும் கிராம மக்கள் * வேடிக்கை பார்க்கும் மின் அதிகாரிகள்
டிரான்ஸ்பார்மர் பழுதை கையாளும் கிராம மக்கள் * வேடிக்கை பார்க்கும் மின் அதிகாரிகள்
டிரான்ஸ்பார்மர் பழுதை கையாளும் கிராம மக்கள் * வேடிக்கை பார்க்கும் மின் அதிகாரிகள்
ADDED : ஜூன் 07, 2024 08:20 PM

திருப்புவனம்:திருப்புவனம் கிராம மின் வழித்தடத்தில் ஏற்படும் பழுதை கிராமப்புற மக்களே மின் வாரியத்திற்கு சொந்தமான உபகரணங்களை பயன்படுத்தி பழுது பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திருப்புவனம் நெல்முடிகரை, திருப்பாச்சேத்தி, பூவந்தி, பொட்டப்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்கள் மூலம் நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீடுகள், தொழிற்சாலைகளுக்கு சரியான மின்னழுத்ததுடன் மின் விநியோகம் செய்ய டிரான்ஸ்பார்மர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்படுவதுண்டு. பழுதை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உரிய உபகரணங்களுடன் டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை துண்டித்து பழுதை சரி செய்வது வழக்கம்.
டிரான்ஸ்பார்மரை நிறுத்தவும், செயல்படுத்தவும் மின்வாரிய ஊழியர்களுக்கு லீவர், சாவி வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மின்வாரிய ஊழியர்கள் தவிர மற்ற யாரும் பயன்படுத்த கூடாது, ஆனால் நடைமுறையில் மின்வாரிய ஊழியர்கள் கிராமப்புறம், செங்கல் சேம்பர், நவீன அரிசி ஆலை உள்ளிட்டவற்றின் அருகே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களில் பழுதை நீக்க அங்குள்ள மக்களிடம் சாவி, லீவர் ஆகியவற்றை வழங்கி விடுகின்றனர்.
செங்கல் சேம்பர் ஊழியர்கள் பலரும், மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ, டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டாலோ லீவர், சாவியை பயன்படுத்தி டிரான்ஸ்பார்மரில் உரிய பாதுகாப்பின்றி சரி செய்கின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பல இடங்களில் தனி நபர்கள் டிரான்ஸ்பார்மரை ஆபத்தான முறையில் கையாள்வதால் விபத்துகள் நடைபெறுகின்றன. அரசுக்கு சொந்தமான பொருட்களை உரிய அனுமதி இன்றி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பது வழக்கம், ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரிடம் கேட்ட போது, 'மின் வாரிய ஊழியர் தவிர வேறு யாரும் டிரான்ஸ்பார்மரை கையாள்வது தவறு,'' என கூறியதுடன், அப்பகுதி மின் வாரிய கம்பியாளருக்கு இணைப்பு கொடுத்தார். அவரிடம் கேட்டதற்கு,''லீவரை அவர்களாகவே செய்து கொள்கின்றனர்,'' என்றார்.
'சாவியும் வைத்துள்ளனரே' என கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.