/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.புதுார் கண்மாய் கரை உயர்த்த கிராம மக்கள் எதிர்ப்பு
/
அ.புதுார் கண்மாய் கரை உயர்த்த கிராம மக்கள் எதிர்ப்பு
அ.புதுார் கண்மாய் கரை உயர்த்த கிராம மக்கள் எதிர்ப்பு
அ.புதுார் கண்மாய் கரை உயர்த்த கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 27, 2024 05:30 AM
மானாமதுரை, : மானாமதுரை அருகே அன்னவாசல், அ.புதுார் கிராம கண்மாய் கரையை உயர்த்துவதால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட அன்னவாசல் அன்னவாசல் புதுார் கிராமங்களுக்கு அடுத்துள்ள அரிமண்டபம் கிராம கண்மாய் கலுங்கிலிருந்து கண்மாய் கரையை உயர்த்தும் பணியும், மராமத்து பணியும் துவங்கியுள்ளது. இக் கண்மாய் கரையை உயர்த்துவதால் மழைக்காலங்களில் மேலும் தண்ணீர் தேங்கி அன்னவாசல் அ.புதுார் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள கரையின் அளவிற்கு தண்ணீரை தேக்கும் போதே அன்னவாசல்,அ.புதுார் கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து விடுவதால் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம். தற்போது இந்த கண்மாய் கரையை மேலும் உயர்த்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கூடுதலாக மழை நீர் தேங்கி மிகப்பெரிய சேதமும், உயிர் பலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் கரையை உயர்த்தாமல் கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இப்பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.