/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல்
/
பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல்
ADDED : ஜன 27, 2024 06:50 AM

காரைக்குடி : கல்லல் அருகே 350 ஆண்டு பழமையான பள்ளிவாசல், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. இந்து பெண்கள் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர்.
கல்லல் அருகே உள்ள ஆலம்பட்டு குருந்தம்பட்டு கிராமத்தில் ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. 350 ஆண்டு பழமையான இந்த பள்ளிவாசல் தற்போது பழமை மாறாமல் மீண்டும் அதே பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் வளாகத்தில் முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளிவாசலை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.என் பாஷா திறந்து வைத்தார். இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு ஆலம்பட்டு குருந்தம்பட்டு கல்லல் உட்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இந்து பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

