/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம்
/
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜன 27, 2024 04:45 AM
சிவகங்கை, : சிவகங்கை நகர் அரண்மனை வாசலில் தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜா அமுதன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி மாநில மாணவர் அணி துணை செயலாளர் பூர்ண சங்கீதா, பேச்சாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., சார்பில் சிவகங்கை ராமச்சந்திரா பூங்கா அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம். எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன் ,குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அருள் ஸ்டீபன், கோபி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

