/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் தொடர் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்
/
திருப்புத்துாரில் தொடர் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்
திருப்புத்துாரில் தொடர் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்
திருப்புத்துாரில் தொடர் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள்
ADDED : பிப் 24, 2024 05:00 AM

திருப்புத்துார், : திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் நகரின் மையப்பகுதியில் உள்ளது.மதுரை, காரைக்குடி,சிங்கம்புணரி, ஆலங்குடி ரோடுகள் சந்திப்பில் உள்ளது.
பல முக்கிய தெருக்களின் ரோடுகளும் சந்திக்கின்றன. பஸ் உள்ளே செல்லும் வாயில், வெளியேறும் வாயில் இந்த ரோட்டில் சந்திக்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது. மேலும் மதுரை ரோடு வளைவில் பாதசாரிகள் நடந்து செல்வது கடினமாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ரோடு விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரியுள்ளனர்.
காரைக்குடி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், பயன்படாமல் உள்ள வருவாய்த்துறை அலுவலக வளாகம், பொதுப்பணித்துறை வளாகத்திலுள்ள உபரி நிலங்கள் போன்றவற்றை பயன்படுத்தி ரோட்டை விரிவு படுத்த ஆய்வு நடத்த வேண்டும்.
மேலும் மதுரை ரோடு வளைவில் முன்பு சமுதாயக் கிணறு, தற்போது கழிவு நீர் வ டிகால் உள்ள பகுதியிலும் ரோடு விரிவுபடுத்தப்பட்டு நடைபாதை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ரோட்டில் பாதசாரிகளுக்கான நடைபாதையும், வாகனங்கள் செல்ல கூடுதல் இடமும் கிடைக்கும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.