நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
தலைமையாசிரியர் முருகன் தொடங்கி வைத்தார். அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது கடும் சவாலாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரைப்போட்டி, ரங்கோலி வரைதல் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.
பசுமைப்பணி ஒருங்கிணைப்பாளர் சந்திரசூரியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.