ADDED : ஜன 27, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவிலில் ரோட்டில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.
காளையார்கோவில் அருகே உசிலங்குளம் விலக்கில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்ற போலீசார் பிறந்து ஒரு மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை கிடப்பதை பார்த்தனர்.
அந்த குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். உடல் முழுவதும் செம்மண் பரவி கிடந்ததால், அக்குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது யாருடைய குழந்தை, எதற்காக ரோட்டில் வீசி சென்றனர் என்பது குறித்து காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

