/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பை மஞ்சுவிரட்டு; 500 காளைகள் பங்கேற்பு
/
நெற்குப்பை மஞ்சுவிரட்டு; 500 காளைகள் பங்கேற்பு
ADDED : ஜன 17, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை : நெற்குப்பையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 500 காளைகள் பங்கேற்றனர். மாடுபிடிக்க முயன்ற 7 பேர் காயமுற்றனர்.
இங்கு, 3 பிரிவாக மஞ்சுவிரட்டு நடந்தது. வடக்கு, கீழ, மேல தெருக்களில் இருந்து 500 காளைகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளை அடக்க முயன்ற 7 பேர் காயமுற்றனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

