ADDED : ஜூன் 07, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி அருகே ஏ.ஆர். உசிலம்பட்டி கிராமத்தில் சரக்கு வேன் மோதியதில் ஆறு வயது குழந்தை உயிரிழந்தது.
ஏ.ஆர்.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது ஆறு வயது பெண் குழந்தை கடைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கூலி ஆட்களை இறக்கி விட வந்த சரக்கு வேன் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. வேன் டிரைவர் தப்பி விட்டார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

