/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வகுப்பறை கட்டும் பணி சுணக்கம்; மாணவர்கள் தவிப்பு
/
வகுப்பறை கட்டும் பணி சுணக்கம்; மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜன 17, 2024 12:31 AM

காரைக்குடி ; காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமான பணி மந்த கதியில் நடப்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பள்ளியில் 1,500மாணவர்கள் வரை படிக்கின்றனர். 60 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை வசதிகள் இல்லை. இதனால் கூடுதலாக 5 வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
கட்டுமான பணி துவங்கி ஓராண்டிற்கு மேல் ஆகியும், பணிகள் மந்த நிலையில் நடக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும் கழிப்பறை வசதியில்லை. சைக்கிள்கள் நிறுத்தவும் இடமின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். புதிய வகுப்பறை கட்டடத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

