
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், - திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
ஆட்சிக்குழு செயலர் நா.ஆறுமுக ராஜன் தலைமை வகித்து பட்டமளிப்பை துவக்கினார். ஆட்சிக்குழுத் துணைத் தலைவர் நா.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் கரு.ஜெயக்குமார் பட்டமளிப்பு அறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சே.சுடலைமுத்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
பேராசிரியர் டி.அறவள்ளுவன் தகுதியான பட்டம் பெற இயலாதவர்களுக்கான அறிக்கையை சமர்ப்பித்தார். மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

