/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முடிந்த கட்டுமானத்திற்கு நிதி வழங்குவதில் இழுத்தடிப்பு
/
முடிந்த கட்டுமானத்திற்கு நிதி வழங்குவதில் இழுத்தடிப்பு
முடிந்த கட்டுமானத்திற்கு நிதி வழங்குவதில் இழுத்தடிப்பு
முடிந்த கட்டுமானத்திற்கு நிதி வழங்குவதில் இழுத்தடிப்பு
ADDED : மே 27, 2025 04:17 AM

இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என முன்னாள் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் முருகன்கலெக்டரிடம் வாட்ஸ் ஆப்பில் குமுறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம்இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பச்சேரி பகுதி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் முருகன். 2023--2024ல் ஜே.ஜே.எம்.,திட்டத்தில் பெரும்பச்சேரி ஊராட்சி சுபாஷ் நகரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டது.
அப்போதைய ஒன்றியகவுன்சிலர் முருகன் வேறொருவரின் பெயரில் ஒப்பந்தம் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பிப்ரவரியில் முடித்துள்ளார். அதற்குரிய தொகையை விடுவிக்க கோரி சிவகங்கையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுள்ளார்.
முருகன் கூறியதாவது:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியதற்கான தொகையை விடுவிக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் ரூ.6.5 லட்சத்தை இழுத்தடிக்கின்றனர்.
கலெக்டரின் வாட்ஸ் ஆப்பிற்கு ஏற்கனவே 2 முறை புகார் தெரிவித்தேன். அதற்கும் நடவடிக்கை இல்லை. செலவழித்த தொகைக்கு வட்டி கட்ட முடியவில்லை. உடனடியாக தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் கலெக்டருக்கு மீண்டும் வாட்ஸ் ஆப்பில்அனுப்பியுள்ளேன், என்றார்.
இது குறித்து பி.டி.ஓ., ரத்தினவேலிடம் கேட்டபோது, நான் பதவியேற்று இரு வாரம் தான் ஆகிறது. முருகன் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.