/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுவது எப்போது கலெக்டரிடம் விவசாயிகள் கேள்வி
/
ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுவது எப்போது கலெக்டரிடம் விவசாயிகள் கேள்வி
ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுவது எப்போது கலெக்டரிடம் விவசாயிகள் கேள்வி
ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுவது எப்போது கலெக்டரிடம் விவசாயிகள் கேள்வி
ADDED : ஜன 27, 2024 06:53 AM

சிவகங்கை, : தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து துவக்க வேண்டும் என திருமலை கோனேரிபட்டி கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், திருமலை கோனேரிபட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மகளிர் திட்ட இயக்குனர் கவிதபிரியா, ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கீடு செய்த ரூ.28 கோடி ஷீல்டு கால்வாய் கட்டுமான பணியை விரைந்து திறக்க வேண்டும்.
பெரியாறு பாசன தண்ணீரை ஷீல்டு கால்வாயில் முறையாக திறக்க வேண்டும். சிவகங்கை - கள்ளராதினிபட்டி வரை முறையாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
ஊராட்சியில் ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து செய்துதர வேண்டும் உட்பட ஏராளமான கோரிக்கைகளை கலெக்டரிடம் பொதுமக்கள், விவசாயிகள் முன் வைத்தனர். மாவட்ட அளவில் 445 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது.
இதில் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட செயல்பாடு, ஊராட்சி வரவு செலவு அறிக்கை உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில், கலெக்டர், கோட்டாட்சியர் சுகிதா பங்கேற்றனர். கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஏற்பாட்டை செய்திருந்தார்.

