/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் மீன்பிடி விழா
/
பிள்ளையார்பட்டியில் மீன்பிடி விழா
ADDED : ஜூன் 15, 2025 11:50 PM

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதி கண்மாய்களில் கோடைகாலம் துவங்கியவுடன் நீர் வற்றிய கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடத்தி வருகின்றனர். நேற்று பிள்ளையார்பட்டி குன்னங்கண்மாயில் மீன்பிடி விழா நடத்தப்பட்டது.
பாரம்பரிய ஊத்தா கூடையை பயன்படுத்தி மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டது. சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து பங்கேற்றனர். ரூ.200 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைத்தவுடன் கூட்டமாக சென்று கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க துவங்கினர். பெரிய கருவாட்டு மீன், கட்லா, கெழுத்தி, கெண்டை, பாப்லெட், சிலேபி உள்ளிட்ட வகை மீன்கள் கிடைத்தன. மீன்கள் சரியாக சிக்காததால், அடுத்தடுத்த கண்மாய்களில் இறங்கி மீன்பிடித்து சென்றனர்.