நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.
ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி தொகுதி அ.தி.மு.க.சார்பில் பொதுக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்நாதன், தலைமை கழக பேச்சாளர் கண்ணன், நகராட்சி துணை தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் தொகுதிக்குட்பட்ட தேவகோட்டை, காரைக்குடி நகர், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல் வடக்கு ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

