/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு பசுமை விருது
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு பசுமை விருது
ADDED : ஜன 10, 2024 12:20 AM

சிவகங்கை : சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அளித்த நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனம், கல்வி நிறுவனம், குடியிருப்போர் நல சங்கம், தனி நபர், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல், காற்று மாசை குறைத்தல், பாலிதீன் கழிவுகளின் சுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற பாலிதீன் கழிவு தொடர்பான திட்டங்கள் குறித்து செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இவ்விருது வழங்கப்படும். கலெக்டர் தலைமையில் அமைந்துள்ள குழு மூலம் தகுதி வாய்ந்த தலா 100 தனி நபர், நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளமான www.tnpcb.gov.inல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஏப்.15க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

