/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை
/
சிவகங்கையில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை
ADDED : ஜூன் 06, 2025 02:40 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்கு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல், பெற்றோருக்கு உயர்கல்வி தொடர்பான விளக்கம் அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 க்கு பின் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., தொடர்பான படிப்புகளில் எங்கு சேர்வது, அதற்கான நுழைவு தேர்வு, உதவி தொகை எங்கு கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை பெறலாம்.
இக்கட்டுப்பாட்டு அறை 2025 அக்டோபர் வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்து தகவல் பெறலாம். இல்லாத பட்சத்தில் 04575 -246 225 அல்லது 94871 71986 என்ற எண்ணில் கேட்டு அறியலாம், என்றார்.