/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயந்திரத்தில் சிக்கி பணியாளர் கை சேதம்
/
இயந்திரத்தில் சிக்கி பணியாளர் கை சேதம்
ADDED : ஜன 17, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை ஆவரங்காட்டை சேர்ந்த ராமசந்திரன் மனைவி சித்ரா 44. இவர் இங்கு நகராட்சியில் நிரந்தர துாய்மைப் பணியாளராக உள்ளார்.
நேற்று காலை சிவகங்கை சுண்ணாம்பு காளவாசலில் உள்ள குப்பை உரக்கிடங்கில் பணிபுரிந்தார். குப்பையில் இருந்து காய்கறி கழிவுகள், குப்பை தரம் பிரித்து அரைத்து உரமாக்கும் பணி நடக்கிறது.
இவர் அரவை இயந்திரத்தை சுத்தம் செய்த போது இவரது கை சுவிட்ச்' -ல் பட்டு இயந்திரம் ஓடத்துவங்கியது. இவரின் வலது கை அதில் சிக்கியதில் முழுவதும் நசுங்கியது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

