/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறுவடையின் போது பூச்சி தாக்குதல்
/
அறுவடையின் போது பூச்சி தாக்குதல்
ADDED : ஜன 17, 2024 12:31 AM

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி பகுதியில் அறுவடை நேரத்தில் நெற்பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இத்தாலுகாவில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே நெல் சாகுபடி செய்துள்ளனர். அதிலும் பலர் தாமதமாகவே விவசாய பணிகளை துவக்கினர். இந்நிலையில் சில இடங்களில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக சில நாட்களே உள்ள நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு கதிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேங்கைபட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் தண்ணீர் மூலம் விளைவிக்கப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் அறுவடைப் பணிகள் துவங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு நெல் சாகுபடியில் பெருத்த ஏமாற்றமே ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

