ADDED : பிப் 05, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : தென்னிந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டியில் திருப்புவனம் அரியவா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஈரோட்டில் தென்னிந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தன.
தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் திருப்புவனம் அரியவா பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சாம்பியன் பட்டம்வென்ற மாணவ, மாணவியர்கள், கராத்தே பயிற்சியாளர் வினீத், கவுரிசங்கர் ஆகியோரை முதன்மை முதல்வர் கண்ணன், முதல்வர் தனபாலன் , தலைமையாசிரியை சுஜாதா ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.