
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை வட்டார வள மையத்திற்குட்பட்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தன்னார்வலர்களுக்கான பயிற்சி சிவகங்கை வட்டார வள மையத்தில் நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ரூபாராணி துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் இந்துராணி பார்வையிட்டார். புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தன்னார்வலர்கள் தங்கள் மையங்களில் பயிலும் கற்போர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் எழுத்தறிவு இயக்கம், அரசின் நிதி உதவித் திட்டங்கள், சட்டங்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவிதா மற்றும் பாண்டிச்செல்வி எடுத்துரைத்தனர்.

