/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் நாளை மயூர வாகன சேவன விழா
/
மானாமதுரையில் நாளை மயூர வாகன சேவன விழா
ADDED : ஜன 09, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதன் பாம்பன் குமரகுருதாச சுவாமி கோவிலில் நாளை மயூர வாகன சேவன விழா நடைபெற உள்ளது.
காலை 6:00 மணிக்கு பாம்பன் குமரகுருதாச சுவாமி பாடல் பாராயணமும்,6:30 மணிக்கு வஜ்ராயுதத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும்,இரவு 7:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

