/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை
/
சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை
சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை
சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை
ADDED : ஜன 27, 2024 06:46 AM

மானாமதுரை,: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள்,பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டசூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொது உயிரி மருத்துவக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நோக்கில் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களின் கருத்து கேட்பு கூட்டம் பிப். 21ம் தேதி மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் செய்களத்தூர் மற்றும் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா சிறப்பு கிராமசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
காவிரி,வைகை,கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராமமுருகன் கூறுகையில், இங்குள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஏற்கனவே தனியாருக்கு சொந்தமான உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடற்பாசிகளை கொதிகலன்களில் கொதிக்க வைத்து ஆவியாக்குவதால் அருகில் உள்ள செய்களத்துார் மற்றும் கொன்னக்குளம்
ஊராட்சியில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தில் தவித்து வருகின்றனர். சிப்காட் வளாகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் 15க்கும் மேற்பட்ட ஆலைகளை மூடிவிட்டு இங்குள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்றார்.மேலும் மத்திய, மாநில அரசுகள் இது போன்ற ஆலைகளை குடியிருப்பு பகுதி அல்லாத வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

