நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி, : பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் விசுமதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
டி.வி.எஸ். குழுமத்தின் நிர்வாக ஆலோசகர் ராமன் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டல், தனித்திறமைகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். தொழில்முனைவோர் உருவாவது எப்படி, மாணவிகள் தொழில்களில் வெற்றி பெறுவது எப்படி என காணொலி காட்சியும் ஒளிபரப்பட்டது.
நிகழ்ச்சியில் மூன்றாமாண்டு மாணவி கிருத்திகா நன்றி கூறினார்.

