/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருட்டில் மூழ்கிய சுங்கச்சாவடி தவித்த வாகன ஓட்டிகள்
/
இருட்டில் மூழ்கிய சுங்கச்சாவடி தவித்த வாகன ஓட்டிகள்
இருட்டில் மூழ்கிய சுங்கச்சாவடி தவித்த வாகன ஓட்டிகள்
இருட்டில் மூழ்கிய சுங்கச்சாவடி தவித்த வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 26, 2024 05:22 AM

திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடியில் வாகன நிறுத்துமிடம், ஒய்வறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகள் கொண்டு வரும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி ஓய்வெடுப்பது வழக்கம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பல மாதங்களாக உயர்கோபுர விளக்குகள் உள்ளிட்ட விளக்குகள் சரிவர எரிவதில்லை.
இதனால் வாகனங்களை இயக்கி வரும் வாகனங்கள் ஓய்வெடுக்க முடிவதில்லை.
தற்போது மாலை ஆறுமணிக்கே இருள் சூழ்ந்து விடுவதால் வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தொடர்ச்சியாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
விளக்குகள் எரியாதது குறித்து பலமுறை புகார் அளித்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுங்கச்சாவடியில் மின் கேபிள் தரைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய மழையால் மின்சார கேபிள்கள் பழுதாகி விட்டன. இன்னமும் ஈரம் காயாததால் பழுது பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடியில் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

