/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டுக்கு புதிய நிபந்தனை; காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு
/
ஜல்லிக்கட்டுக்கு புதிய நிபந்தனை; காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு புதிய நிபந்தனை; காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு புதிய நிபந்தனை; காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு
ADDED : ஜன 09, 2024 11:51 PM

திருப்புவனம் : ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு தமிழக அரசின் புதிய நிபந்தனைகளுக்கு காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், புதுார், திருப்பாச்சேத்தி, பூவந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தினசரி பருத்தி விதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம், தடுப்பூசி என முறையான பராமரிப்பு,தினசரி பயிற்சி, நீச்சல் பயிற்சி என பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்தாண்டு காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும், காளை முட்டி இறந்தால் விழா கமிட்டியினர் இறந்தவர் குடும்பத்திற்கு ஆறு லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு காளைகள் வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் புதுாரில் ஐந்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் பாரத்ராஜா கூறுகையில்: அரசின் புதிய நிபந்தனைகள் காளை வளர்ப்பதையே முற்றிலும் அழிக்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் போட்டி நடத்துவதற்கும் ஆளும் கட்சி ஆதரவு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. போட்டியின் போது மாடு பிடி வீரர் இறந்தால் விழா கமிட்டியினர் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையால் பலரும் போட்டிகளை நடத்தவே அச்சப்படுகின்றனர். காளைகளுக்கு ரப்பர் குப்பி அணிவிப்பதும் தவறு, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயிருக்கு உத்தரவாதம் இன்றி தான் பணிபுரிகின்றனர்.
உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்குரிய வழிமுறைகளில் நிவாரணம் தேட வேண்டுமே தவிர விழா நடத்துபவர்களை குற்றம் சாட்டுவது தவறு, தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவு காளைகள் வளர்க்கப்படுகிறது. என தமிழக அரசு நிபந்தனைகளை வாபஸ் பெற வேண்டும், என்றார்.

