/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
/
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 17, 2024 12:21 AM
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளில் விரைவாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மானாமதுரை, இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை வைத்து ஏராளமானோர் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வந்தனர்.
ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ மழைக்கு முன்பாக பயிரிட்ட ஏராளமான விவசாயிகள் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காத காரணத்தினால் ஏராளமான விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த வருடம் மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகரித்ததால் நெல்லை கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ. 30 லிருந்து ரூ.50 வரை கூடுதலாக பணம் வசூல் செய்யப்பட்டது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த வருடம் உடனடியாக அறுவடை நடைபெறும் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஆளும் கட்சியினரின் தலையீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

