/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலைமை ஆசிரியரை மாற்ற பெற்றோர்கள் போராட்டம்
/
தலைமை ஆசிரியரை மாற்ற பெற்றோர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 05, 2025 01:19 AM
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் ஊத்துப்பட்டியில் ஊ.ஓ.துவக்கப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் காலை இப்பள்ளி முன் கூடிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்ப மறுத்து கோஷமிட்டனர்.
'இப்பள்ளியில் சில ஆண்டுகளாக ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி,பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை. பக்கத்து கிராமங்களான வைரவன்பட்டி, தானிப்பட்டி, மேலையான்பட்டி, சோலுடையான்பட்டி துவக்கப்பள்ளிகளுக்கு பல கி.மீ.,துாரம் சென்று படிக்கின்றனர். தலைமையாசிரியரை மாற்றினால் தான் மாணவர்களை பள்ளிக்குள் அனுப்புவோம்' என்றனர். சில மாணவர்களுடன் வகுப்பு நடந்தது.
இப்பள்ளி தலைமையாசிரியர் ராமு கடந்த ஆண்டு வேறு பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு, மாற்று ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இந்த கல்வியாண்டில் மீண்டும் தலைமையாசிரியராக ராமு பணிக்கு வந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று தலைமையாசிரியர் ராமு மீண்டும் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டு, மாற்று ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.