ADDED : மார் 21, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிவர்ணம் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.
கடந்த வருடம் ஆக.18ம் தேதி விபத்தில் பலியானார். இவருடன் 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக போலீசார் டெலிகிராம் செயலி மூலம் உதவும் கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஒன்று சேர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்து 24 ஆயிரத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் போலீசார்பாலமுருகன், சுரேஷ்குமார், பாலமுருகன், சரவணன், செந்தில், மணிகண்டன், கண்ணன், சக்கரவர்த்தி, விஜயகுமார், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.