
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை ; சிவகங்கையில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். கிளை தலைவர் சுந்தரமாணிக்கம் வரவேற்றார். கவுரவ தலைவர் கண்ணப்பன் துவக்கி வைத்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் சிறப்புரை ஆற்றினார். பாடகர் முத்து சிற்பியின் கலை நிகழ்ச்சி நடந்தது.
ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், மகேஷ்துரை, பாபு சண்முகநாத சேதுபது பங்கேற்றனர். பொருளாளர் நாகலிங்கம் நன்றி கூறினார்.

