நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற மார்கழி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தார்.
அப்போது சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சுவாமிக்கு மலர்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்களால் அர்ச்சனை செய்தனர்.

