/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமாஞ்சோலையில் கொள்முதல் மையம்
/
திருமாஞ்சோலையில் கொள்முதல் மையம்
ADDED : ஜன 27, 2024 06:55 AM
பூவந்தி பூவந்தி அருகே திருமாஞ்சோலையில் இன்று காலை தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வழக்கமாக ஜனவரி கடைசியில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு மார்ச் வரை விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும், இந்தாண்டு நெல் நடவு எதிர்பார்த்த அளவு நடைபெறாததால் தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை. மாவட்டத்தில் 63 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்க பரிந்துரை செய்யப்பட்டாலும், அறுவடை இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் தொடங்கப்படவில்லை. எனவே நெல் கொள்முதல் மையம் திறப்பும் தாமதமாகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் இன்று திருமாஞ்சோலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட உள்ளது. மற்ற பகுதிகளில் பிப்ரவரி முதல் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

