/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் வேண்டுகோள்
/
அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் வேண்டுகோள்
அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் வேண்டுகோள்
அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 29, 2024 11:43 PM
மானாமதுரை, -மானாமதுரை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் காலாவதியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நோயாளிகளின் நலன் கருதி புதிய ஆம்புலன்ஸ் வழங்க வேண்டுமென நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தவிர பிரசவத்திற்காக ஏராளமான கர்ப்பிணிகளும் வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் தற்போது இந்த வாகனத்தால் மிகவும் விரைவாக செல்ல முடியாத சூழ்நிலையில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை சிவகங்கை,மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.