/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகள் கம்பெனியில் பொங்கல் கரும்பு கொள்முதல்
/
விவசாயிகள் கம்பெனியில் பொங்கல் கரும்பு கொள்முதல்
ADDED : ஜன 09, 2024 11:42 PM
சிங்கம்புணரி : பொங்கல் பரிசுக்கான கரும்புகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக அளவில் 5000 விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்படும் ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் சிங்கம்புணரியில் நடந்தது. ஏற்றுமதி மேம்பாட்டு மையத் துணைத் தலைவர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். ஐந்திணை நிர்வாக இயக்குனர் அருண் வரவேற்றார். இயக்குநர்கள் ஆதிமூலம், பில்லியப்பன், மாணிக்கவாசகம், செல்வம், பாலமுருகன், முத்துமீரா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பொங்கல் பரிசுக்கான கரும்பு, தேங்காயை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

