sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அருங்காட்சியக மின் இணைப்புகளில் பழுது; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

/

கீழடி அருங்காட்சியக மின் இணைப்புகளில் பழுது; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கீழடி அருங்காட்சியக மின் இணைப்புகளில் பழுது; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கீழடி அருங்காட்சியக மின் இணைப்புகளில் பழுது; சுற்றுலா பயணிகள் அதிருப்தி


ADDED : ஜூலை 29, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையை அடுத்து அ.தி.மு.க., ஆட்சியில் கீழடி அரசு பள்ளி அருகே இரண்டு ஏக்கர் நிலத்தில் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் செட்டி நாட்டு கட்டட கலை பாணியில் அருங்காட்சியகம் கட்டும் பணி தொடங்கியது.

மொத்தமுள்ள பத்து கட்டட தொகுதிகளில் ஆறு கட்டட தொகுதிகளில் அணிகலன்கள், சுடுமண் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், வேளான் பொருட்கள் என தனித்தனி கட்டடங்களில் பொருட்கள் காட்சிப்படுத்த வசதியாக கட்டுமான பணிகள் நடந்தன.

கட்டுமான பணிகள் நிறைவடையும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் உலக தரம் வாய்ந்த அளவில் அருங்காட்சியகம் அமைய வேண்டும்.

பொருட்களை அதன் பழமை மாறாமல் காட்சிப்படுத்த வேண்டும் என கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு 18 கோடியே 44 லட்சரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடந்தன. பண்டைய கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் பொருட்களை சுற்றிலும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டன.

பொருட்களை காட்சிப்படுத்தும் விதம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காக மின் விளக்குகள் உள்ளிட்டவைகள் நவீன வசதியுடன் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு கட்டட தொகுதிகளில் தீ எச்சரிக்கை கருவி உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டன.

மினி ஏசி திரையரங்கு, மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிரம்பிய வகையில் கட்டுமான பணிகள் முடிந்து 2023 மார்ச் 5ம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

அருங்காட்சியகம் திறக்கப்பட்டது முதல் இன்று வரை மின் இணைப்புகளில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு வருகிறது.

கட்டட சுவர்களில் மின்கசிவு, மின்சாரம் தடை பட்டால் ஜெனரேட்டர் இயக்க முடியாமல் அவதி என பலமுறை மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அருங்காட்சியகத்தில் பல இடங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. மின்சாரம் தடை பட்டால் ஜெனரேட்டரும் இயங்குவதில்லை.

இதனால் உலகம் முழுவதிலும் இருந்து அருங்காட்சியகத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

அருங்காட்சியகத்தில் மின் இணைப்பு வழங்கிய தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு போதிய முன் அனுபவம் இல்லை என கூறப்படுகிறது.

அருங்காட்சியகத்தில் முன் அனுபவம் வாய்ந்த எலக்ட்ரீஷியனும் இல்லை. மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படுவது இல்லை. அருங்காட்சியகத்தில் தரமற்ற முறையில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு அருங்காட்சியகத்தில் மின் இணைப்புகள் குறித்து விரிவான விசாரணை செய்து, ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழடி, ஜூலை 29-

கீழடியில் கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு உலக தரம் வாய்ந்த அளவில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தில் ஒரே வருடத்தில் மின் இணைப்புகள் பலவும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.






      Dinamalar
      Follow us