sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

/

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின கொண்டாட்டம்


ADDED : ஜன 27, 2024 04:51 AM

Google News

ADDED : ஜன 27, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகம், தனியார் அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

* சிவகங்கை தினமலர் கிளை அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர்.

* கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் கொடியேற்றினார். எஸ்.பி., பி.கே., அர்விந்த் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், கலெக்டர் பி.ஏ., (பொது) ஜெயமணி, கோட்டாட்சியர்கள் சிவகங்கை சுகிதா, தேவகோட்டை பால்துரை, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட ஊராட்சி செயலர் வீரராகவன் பங்கேற்றனர். தியாகிகள், அவரது வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்தார். 26 பயனாளிக்கு ரூ.82.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். 65 போலீசாருக்கு முதல்வர் பதக்கம், 88 போலீசாருக்கு மெச்சத்தக்க பணி விருது, 212 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார். நீர்நிலை மேம்பாட்டு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக தானம் அறக்கட்டளை மூத்த அணி தலைவர் வெள்ளையப்பன், ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆகியோருக்கு பதக்கம், சான்றினை கலெக்டர் வழங்கினார்.

* சிவகங்கை நகராட்சியில் தலைவர் துரை ஆனந்த் கொடியேற்றினார். துணை தலைவர் கார்கண்ணன், கமிஷனர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை அரசு மருத்துவமனையில் டீன் சத்தியபாமா தலைமையில் கண்காணிப்பாளர் குமரவேல், மருத்துவ கல்லுாரியில் துணை முதல்வர் விசாலாட்சி கொடியேற்றினர். நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர்கள் முகமது ரபி, தென்றல் உட்பட துறை தலைவர், டாக்டர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனர் கமலவாசன் கொடியேற்றினார். டாக்டர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளி வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் கொடியேற்றினார். டி.எஸ்.பி., ஓய்வு ஞானசேகரன், ஓய்வு பி.டி.ஓ., அன்புத்துரை, தமிழ் சங்க செயலர் மாலா, துணை தலைவர் முருகானந்தம், செஞ்சிலுவை சங்க துணை தலைவர் முத்துப்பாண்டியன் பங்கேற்றனர்.

* நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்குழு தலைவர் கண்ணப்பன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை மகாலட்சுமி வரவேற்றார். பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், போலீசார் குணசுந்தரி, வனிதா, ஆசிரியர் கரிகாலன் பங்கேற்றனர்.

* சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலட்சுமி கொடியேற்றினார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை தபால் கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் கொடியேற்றினார். அஞ்சல் துறை அலுவலர், ஊழியர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை 21ம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஹரீஷ் கொடியேற்றினார். பள்ளி அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி, முதல்வர் விவேகானந்தன், துணை முதல்வர்கள் சங்கீதா, அருணாதேவி, கனி, தலைமை ஆசிரியை சாரதா, ஒருங்கிணைப்பாளர் பார்கவி பங்கேற்றனர்.

* சோழபுரம் ரமணவிகாஷ் மேல்நிலை பள்ளியில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் கொடியேற்றினார். ெஹர்ட்புல்னஸ் யோகா மைய பொறுப்பாளர் குமார், சோழபுரம் ஊராட்சி தலைவர் சேவியர், தலைமை ஆசிரியர் கணேஷ், பொறுப்பு ஆசிரியர் அருள்ஆரோக்கியம் பங்கேற்றனர்.

* தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஆசிரியை முத்து மீனாள் கொடியேற்றினார்.

* காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் சாரண ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா கொடியேற்றினார். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஒலிபெருக்கி வழங்கினர். ஆசிரியர் மாத்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

* சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் இந்திரா கொடியேற்றினார். பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

* சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் முதல்வர் துரையரசன் கொடியேற்றினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

*சிவகங்கை ஆர்.ஆர். ஆர். கே.,நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைவர் தலைமை வகித்து கொடியேற்றினார். செயலர் குடியரசு குறித்து பேசினார். கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நன்றி கூறினார்.

சிவகங்கை சாய் பால மந்திர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பள்ளி நிர்வாகி ஆர்த்திகுமார் தலைமையில் விழா நடந்தது. ஆசிரியை புவனேஸ்வரி கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர் வேதராஜ், சிவகங்கை ஜேசிஐ தலைவர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர். ஆசிரியை கோமதிபாலா, இந்திரா காந்தி பேசினர்.

* சிவகங்கை ஸ்ரீபாலமுருகன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி நிர்வாகி குமார் தலைமை வகித்தார். ஆசிரியை ஐஸ்வர்யா கொடியேற்றினார். ஆசிரியை கார்த்திகா பேசினார்.

* சிவகங்கை அல்ஹூதா இஸ்லாமிக் சர்வதேச பதின்ம பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி நிர்வாக குழு தலைவர் முகம்மது இலியாஸ் கொடியேற்றினார். சிவகங்கை வாலாஜா நவாப் பள்ளி இமாம் முகமது ஆபிதின் பாகவி பேசினார்.

* பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பஞ்சவர்ணம் பேசினார். உதவி ஆசிரியர்கள் சந்திரபிரேமா, ராஜா தொகுத்து வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* சிவகங்கை சூரக்குளம் ஆக்ஸ்போர்டு மேல் நிலைப்பள்ளியில் முதல்வர் சுமி, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஹவில்தார் பிரபாகரன், பள்ளி செயலர் மீனா அனந்தகுமார் கொடியேற்றினர்.

* சிவகங்கை தி. புதுார் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முன்னாள் ராணுவ வீரர் பெரியகருப்பனை பள்ளி முதல்வர் வரவேற்றார்.பள்ளி முதல்வர் குமாரி பிரனேஷ் கொடியேற்றினார். மாணவிகளின் வரவேற்பு நடனம் நடந்தது. பள்ளி செயலர் மீனா அனந்தகுமார் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் முருகன் தலைமை வகித்தார். தேவன்கோட்டை ஊராட்சி தலைவர் அம்சவள்ளி, செந்தில்முருகன் கொடியேற்றி வைத்து பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் குணசேகரன் நன்றி கூறினார்.

*சிவகங்கை நேருபஜார் மகாத்மா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் அருண்கணேஷ் வரவேற்றார். ரெப்கோ மேலாளர் ராதா கிருஷ்ணன் கொடியேற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கீர்த்திகா அருண் நன்றி கூறினார்.

* சிவகங்கை நம்பிக்கை அறிவு சார் குறையுடையோர் சிறப்பு பயிற்சி பள்ளி, ஆரம்ப நிலை பயிற்சி மையம், வயது வந்தோருக்கான இல்லத்தில் நடந்த விழாவிற்கு தொழிலதிபர் சீனிவாசன் தலைமை வகித்தார். ராகவ சக்கரவர்த்தி, மலர்விழி பங்கேற்றனர். பள்ளி தாளாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு ஆசிரியர் அருண் கணேஷ் நன்றி கூறினார்.

*சிவகங்கை மேலவாணியங்குடி அன்னை ஸ்ரீ வீரமகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தாளாளர் அசோக்குமார் தலைமையில் கொடியேற்றப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது. பெக்கி அசோக்குமார் பேசினார். பள்ளி முதல்வர் செல்லமணி நன்றி கூறினார்.

* சிவகங்கை இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் பள்ளி செயலர் ஜானகி தலைமையில் விழா நடந்தது. முதல்வர் ஜான்சி வரவேற்றார். மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடந்தது. ஆசிரியைகள் கீதா, ஜெய்ஸ்ரீ, கார்த்திகா, முத்துராணி, துர்காதேவி ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிராம மக்கள், குழந்தைகள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

*தமராக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உமாராணி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ரவி தேசிய கொடியேற்றினார். ஆசிரியர்கள் மோகன், குமரேசன், சகாயடெய்சி, ரேவதி, சுகன்யா பங்கேற்றனர். ஆசிரியர் குமரேசன் நன்றி கூறினார்.

*பி.குளத்துப்பட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் நடந்த விழாவில் தேசியக்கொடியேற்றப்பட்டது. திட்ட இயக்குனர் மகாலிங்கம் வரவேற்றார். பொதுச் செயலாளர் உறுமத்தான் கொடியேற்றினார். மாணவர்கள், ஊழியர்கள், முதியோர்கள் கலந்து கொண்டனர். அன்ன லட்சுமி நன்றி கூறினார்.

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் துணைவேந்தர் க.ரவி கொடியேற்றினார். கார்கில் போரில் பங்கு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் வடிவேல் கவுரவிக்கப்பட்டு, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன் குணசேகரன் பழனிசாமி சேகர் ராசாராம் பதிவாளர் செந்தில் ராஜன் தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் முத்துத்துரை கொடியேற்றினார்.

அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வி குழுமத்தில் சி.ஐ.எஸ்.எப்., உதவி கமாண்டன்ட் மோகன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் பள்ளி தாளாளர் சத்யன் தலைமை ஏற்றார். கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். பள்ளி முதல்வர் சங்கர சுப்பிரமணியம் தேசியக்கொடி ஏற்றினார்.

கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில் பிரியதர்ஷினி ஐயப்பன் கொடியேற்றினார். கல்லூரிகளின் இயக்குனர் ஜெயராஜா, கற்பகமூர்த்தி கல்லுாரி செயலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கவுன்சிலர் நாச்சம்மை மற்றும் மதன் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ராஜ்குமார் வரவேற்றார். முதன்மை முதல்வர் நாராயணன் பள்ளி செயலர் கார்த்திக் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றனர்.

சேது பாஸ்கரா கல்லுாரியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா தேசியக் கொடி ஏற்றினார். இதில் கல்லூரி முதல்வர் கருணாநிதி அறக்கட்டளை உறுப்பினர் விவேகானந்தன் ஆலோசகர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., அலுவலகத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., தேசிய கொடி ஏற்றினார்.

கானாடுகாத்தான் சி.வி.சி.டி.வி., மீனாட்சி பள்ளியில் பள்ளி முதல்வர் கொடியேற்றினார்.

புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் பரமேஸ்வரர் கொடியேற்றினார்.

காரைக்குடி ஸ்ரீ வயிரவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி முதல்வர் உமா கொடியேற்றினார்.

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் கொடியேற்றினார்.

காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் முதல்வர் நாகநாதன் தலைமையேற்றார். பேராசிரியர் ஜெயமணி தேசியக் கொடியேற்றினார்.

காரைக்குடி எஸ்.ஆர் கல்வி குழுமத்தில் ராஜா'ஸ் ஹெரால்ட் பள்ளி மற்றும் எஸ் ஆர் கேட்டரிங் நர்சிங் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தலைமையேற்றார். வழக்கறிஞர் அப்துல் சித்திக் தேசியக் கொடியேற்றினார்.

காரைக்குடி ஸ்ரீ ஐயப்பா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பள்ளி தாளாளர் மணிகண்டன் தேசிய கொடியேற்றினார்.

திருப்புத்துார்: திருப்புத்துார் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மும்தாஜ் கொடியேற்றினர்.

* ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,பர்னபாஸ் அந்தோணி வரவேற்றார்.

*திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் முதல்வர் கேப்டன் கேஆர்.ஜெயக்குமார் கொடியேற்றினார். துணை முதல்வர் ஜி.கோபிநாத் சிறப்புரையாற்றினார். என்.சி.சி.அலுவலர் பேராசிரியர் சந்திரசூடன் தலைமையில் என்.சி.சி.மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

*கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் செயலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சசிக்குமார் கொடியேற்றினார். விவேகானந்தா , கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் சுந்தரவள்ளி கொடியேற்றினார்.

*திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் ஜெகதீசன் கொடியேற்றினார். பேராசிரியர் ஜீவிதா வரவேற்றார். பேராசிரியர் சகீலா பேகம் நன்றி கூறினார்.

*திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் தபசம் கரீம் கொடியேற்றினார். தாளாளர் ரூபன் வரவேற்றார். லிம்ரா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி முதல்வர் ஜாஸ்மின் ரோஜா பங்கேற்றார்.

*திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் அமுதா கொடியேற்றினார். துணை முதல்வர் அருள் சேவியர் அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.

* திருப்புத்துார் புது காட்டாம்பூர் ஸ்ரீ முத்தையா மெமோரியல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் வெங்கடேசன் கொடியேற்றினார்.

* எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை பழ. வள்ளியம்மை கொடியேற்றினார். உதவி தலைமையாசிரியர் ஆ. மலைச்சாமி நன்றி கூறினார்.

*கண்டரமாணிக்கம் சேது ஐராணி மேல்நிலைப் பள்ளியில் காரைக்குடி ஆக்சிஸ் வங்கி மேலாளர் லட்சுமிகாந்த் கொடியேற்றினார்.

* கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.எம். மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் செயலாளர் குணாளன் தலைமை வகித்தார். முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்.நிறுவனர் பழனியப்பன் கொடியேற்றினார்.

* திருப்புத்துார் தென்மாப்பட்டு இந்திரா காந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியை உமா தலைமை வகித்தார். தாளாளர் ஏகாம்பாள் கணேசன் கொடியேற்றினார்.

* மாங்குடி தி.ஊ.ஓ.நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மார்கரெட் சாந்தகுமாரி கொடியேற்றினார்.

* ஆலம்பட்டி தி. ஊ. ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஸ்ரீதர்ராவ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் திலகவதி பாண்டியன் கொடியேற்றினார்.

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடியை ஏற்றினார். செயல் அலுவலர் ஜெயராஜ், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

*திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சின்னையா தேசிய கொடியை ஏற்றினார். துணை தலைவர் மூர்த்தி, பி.டி.ஓ., சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

*திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகன் தேசிய கொடியை ஏற்றினார். ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

*திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் வீரப்பன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

*திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தேசிய கொடியை ஏற்றினார்.

*லாடனேந்தல் உறைவிடப் பள்ளியில் முதல்வர் கன்வர் தீபக் சிங் தேசிய கொடியை ஏற்றினார்.

*திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவகுமார் தேசிய கொடியை ஏற்றினார். எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர்.

*திருப்புவனம் கிட்ஸ் கிங்டம் பள்ளியில் முதல்வர் கற்பக புவனேஸ்வரி தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி நிறுவனர் சுந்தரவடிவேல் ஆசிரியர் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

*திருப்புவனம் அருகே அல்லி நகரம் தொடக்கப் பள்ளியில் தேசிய கொடியை தலைமையாசிரியர் சத்தியேந்திரன் ஏற்றினார். ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.

*பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் பொன்குமார் தேசிய கொடியை ஏற்றினார். செயலர் அசோக், இயக்குனர் சிவகுமார், முதல்வர் விசுமதி பங்கேற்றனர்.

*கீழடி அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை இணை இயக்குநர் ( கீழடி பிரிவு) ரமேஷ் தேசிய கொடியை ஏற்றினார். ஊழியர்கள் , சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

*பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லூரியில் நிறுவனர் மலேசியா பாண்டியன் தேசிய கொடியை ஏற்றினார். பேராசிரியர்கள்,மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் திவ்யா பிரபு கொடியேற்றினார். துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், பி.டி.ஓ., க்கள் ராஜேந்திரகுமார், ஜெகநாதசுந்தரம் பங்கேற்றனர்.

எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் விஜயா குமரன் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் லட்சுமண ராஜு, ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி பேரூராட்சியில் தலைவர் அம்பலமுத்து கொடியேற்றினார். துணைத் தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் சண்முகம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமிர்தலிங்கம் கொடியேற்றினார். தலைமையாசிரியர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் அன்பு, பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி தென்றல், தொழிலதிபர் கே.ஆர்.ஏ. கணேசன், சுகுமாரன் பங்கேற்றனர்.

குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் பேராசிரியர் காந்தி கொடியேற்றினார். இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.

எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி கொடியேற்றினார். தமிழாசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

பிரான்மலை துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் கஸ்துாரி கொடியேற்றினார். ஆசிரியர்கள் பொன்னழகு, சரவணன், முத்துப்பாண்டியன், இந்திரா, நீலாவதி, சூர்யா, கார்த்திகா பங்கேற்றனர்.

மருதிப்பட்டி ஊராட்சியில் தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் கொடியேற்றினார். துணைத்தலைவர் கமலா, ஊராட்சி செயலர் அசோகன் பங்கேற்றனர்.

அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் தலைவர் சரவணன் கொடியேற்றினார். துணைத் தலைவர் ரகுமத்நிஷா பங்கேற்றனர்.

சிவபுரிபட்டி ஊராட்சியில் தலைவர் தமிழரசி கொடியேற்றினார். துணைத் தலைவர் அர்ச்சுனன், ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.

அ.காளாப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுந்தம்மாள் கொடியேற்றினார். துணைத்தலைவர் விஜய் பங்கேற்றனர்.

கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் தலைவர் செம்மலர் கொடியேற்றினார். துணைத்தலைவர் ஜெயசுந்தரி, ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் பங்கேற்றனர்.

ஜெயங்கொண்டநிலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் கொடியேற்றினார். துணைத்தலைவர் சிகப்பாயி பங்கேற்றனர்.

வகுத்தெழுவன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கஸ்தூரி சுந்தரராசு கொடியேற்றினார். துணைத் தலைவர் சேகர் பங்கேற்றனர்.

மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் தலைவர் ஜோதி பித்திரைச்செல்வம் கொடியேற்றினார். துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் பார்கவி முன்னிலையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தேசிய கொடி ஏற்றினார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சிதம்பரம் முன்னிலையில் கவுன்சிலர் அய்யப்பன் கொடி ஏற்றினார்.

தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமையில் மத்திய நிதியமைச்சக முதுநிலை தொழில்நுட்ப அதிகாரி கார்த்திக்குமார் கொடி ஏற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் முகமதியர் பட்டினத்தில் உள்ள அலுவலகத்தில் நகர தலைவர் அன்சர்அலி தலைமையில் மாநில துணைத் செயலாளர் பர்கி கொடியேற்றினார்.

ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலை பள்ளியில் தாளாளர் சோமநாராயணன் தலைமையில் , தலைமையாசிரியை உமா முன்னிலையில் வக்கீல் சிவராமன் கொடியேற்றினார்.

யாதவா நர்சரி பள்ளியில் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், தலைமையாசிரியை அனிதா முன்னிலையில் அறக்கட்டளை நிர்வாகி முத்து கொடியேற்றினார்.

சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் தலைவர் லட்சுமணன் தலைமையில் முதல்வர். ஸ்ரீ தேவி முன்னிலையில் இன்சூரன்ஸ் அதிகாரி பெரியசாமி கொடி ஏற்றினார்.

தாளாம்பாள் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சுப்பிரமணியன் தலைமையில் கவுன்சிலர் சேக் அப்துல்லா கொடி ஏற்றினார்.

புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில், மேலாண்மை குழு தலைவர் தேவி முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் கொடி ஏற்றினார்.

மானாமதுரை: மானாமதுரை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,தமிழரசி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி, மேலாளர் பாலகிருஷ்ணன் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்,சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பூமிநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு மருத்துவர் சண்முகப்பிரியா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்,தாளாளர் கிருஸ்டிராஜ் தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர்கள் பிருந்தா,வள்ளி மயில்,ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கபிலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆட்சியர் மீனாட்சி முதல்வர் சாரதா பொறுப்பாசிரியை பாண்டியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.மானாமதுரை தாராபுரம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சேர்மன் முத்தையா தலைமையில் நடைபெற்ற விழாவில் நடராஜ் கொடியை ஏற்றி வைத்தார்

*கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் தலைமை அலுவலர் முருகன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

*இளையான்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் செந்தில் ராஜ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

*இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் முகமது இக்பால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கல்வியியல் கல்லூரி தலைவர் அகமது ஜலாலுதீன்,செயலாளர் ஜபருல்லா கான், பொருளாளர் அப்துல் அகது, ஆட்சி குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான்,கலை கல்லூரி முதல்வர் ஜபருல்லா கான்,கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

*இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் உசேன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்,தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான்,தலைமை ஆசிரியர் முகமது இலியாஸ்,உதவி தலைமை ஆசிரியர் ராமராஜூ,ஆட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியர் சேக் உதுமான் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us