/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் பயணிகள் மூலம் ரூ.25.49 கோடி வருவாய்
/
ரயில் பயணிகள் மூலம் ரூ.25.49 கோடி வருவாய்
ADDED : ஜூலை 01, 2025 02:46 AM
சிவகங்கை: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து தினமும் 10,884 பேர் ரயிலில் பயணிக்கின்றனர்.இவர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.25.49 கோடி வருவாய் கிடைக்கிறது.
மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு, தேவகோட்டை ரஸ்தா, கல்லல், காரைக்குடி, மானாமதுரை, மேலகொன்னக்குளம், பனங்குடி, சிவகங்கை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.
இந்த ஸ்டேஷன்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு தினமும் 10,884 பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இப்பயணிகள் வருகை மூலம் தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டு (2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை) ரூ. 25 கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 696 வருவாய் ஈட்டியுள்ளது.
முதலிடம் பிடித்த காரைக்குடி
முதலிடத்தை காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் பிடித்துள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன் மூலம் தினமும் 5129 பயணிகள் பயணித்து, ஆண்டுக்கு ரூ.12 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 971 வருவாய் கிடைத்துஉள்ளது.
இரண்டாவது இடத்தில் மானாமதுரை ஸ்டேஷன். இங்கிருந்து தினமும் 2,396 பயணிகள் பயணிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 99 லட்சத்து 24 ஆயிரத்து 880 வருவாய் கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள சிவகங்கை ஸ்டேஷன் மூலம் தினமும் 1,826 பயணிகள் பயணித்ததால் ஆண்டுக்கு ரூ.4 கோடியே 4 லட்சத்து 26 ஆயிரத்து 394 வருவாய் ஈட்டியுள்ளது.