/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி விடுதியில் பள்ளி மாணவி மர்மச்சாவு
/
இளையான்குடி விடுதியில் பள்ளி மாணவி மர்மச்சாவு
ADDED : ஜூலை 02, 2025 07:58 AM

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே விஸ்வநாதபுரம் பிரான்சிஸ் மகள் பிருந்தா, 13. ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, காளையார்கோவில் சகாயராணி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வந்தார்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விடுதி காப்பாளர் அபிநயா, 24, மோட்டார் சுவிட்ச் போட வெளியே வந்த போது, விடுதி வளாகத்திலுள்ள வேப்ப மரத்தில் பிருந்தா சால்வையால் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
காளையார்கோவில் போலீசார், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பினர். பிருந்தாவின் உறவினர்கள் அங்கு குவிந்தனர். ஆர்.டி.ஓ., விஜயகுமார், தாசில்தார் சிவராமன் விசாரித்தனர்.
பிருந்தா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விடுதி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதியக்கோரியும், மருத்துவமனை முன் உறவினர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், கணேசமூர்த்தி பேசினர்.
பிருந்தா சித்தப்பா கணேசன் கூறுகையில், ''பிருந்தாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது. வழக்கில் விடுதி நிர்வாகத்தினரை சேர்க்க வேண்டும். விடுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இறப்பு குறித்து போலீசார் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, மர்மச்சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிருந்தாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சிவகங்கை பழைய மருத்துவமனை அருகே மானாமதுரை - இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.