நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் தென்மாப்பட்டு இந்திராகாந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிறுவனர் வக்கீல் கணேசன் தலைமை வகித்தார்.
முதல்வர் ஏகாம்பாள் வரவேற்றார். 'இஸ்ரோ' விஞ்ஞானி ஜிகே.மணி சிறப்புரையாற்றினார். லயன்ஸ் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் பூவாலை, பேரூராட்சி கவுன்சிலர் பாண்டியன், வள்ளியப்பன் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புக்களை பார்வையிட்டு விஞ்ஞானி ஜிகே.மணி மாணவர்களிடம் விளக்கம் கேட்டார்.

