/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தெருக்களில் நாய் தொல்லையால் அவதி
/
சிவகங்கை தெருக்களில் நாய் தொல்லையால் அவதி
ADDED : ஜூன் 26, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை நகரில் உள்ள தெருக்களில் நாய் தொல்லை அதிகரித்துள்ளதால் தெருக்களில் நடமாடும் பெண்கள் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர்.
சிவகங்கையில் வாரச்சந்தை ரோடு, நேருபஜார், மஜித்ரோடு, உழவர் சந்தை பகுதிகளில் கும்பலாக திரியும் நாய்கள் டூவீலரில் செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன. நாய்கடிக்கு ஆளான பலர் தினசரி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாடவே அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

