நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே தென்கரை மவுண்ட்சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ பள்ளிஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
மாணவ துணைத்தலைவி ரமணி ஸ்ரீ வரவேற்றார். கல்விக் குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்து ஆண்டு மலரை வெளியிட்டார்.இங்கிலாந்து பல்கலை மருத்துவமனை தாமஸ் வி. ஜான் முதன்மை விருந்தினராகஅறிமுகப்படுத்தினார்.
மழலையர் முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கராத்தே,சிலம்பப் பயிற்சி செய்தனர். அடுத்துபுலிகள் பாதுகாப்பு பயிற்சி,அழகிய பட்டாம்பூச்சி பயிற்சி, விண்வெளி பயிற்சி நடந்தது. 100 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம் நடந்தது. தாளாளர் டாக்டர் ஜெய்சன் கே ஜெயபாரதன் வாழ்த்தினார். பெற்றோர்களுக்கான போட்டிகள் நடந்தன. - மாணவர் பேரவை தலைவி வர்ஷிதா ஸ்ரீ நன்றி கூறினார்.

