/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம்: கலெக்டர் எச்சரிக்கை
/
அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம்: கலெக்டர் எச்சரிக்கை
அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம்: கலெக்டர் எச்சரிக்கை
அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம்: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜன 09, 2024 11:51 PM
சிவகங்கை : நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக விவசாயிகளிடம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, மாவட்டத்தில் சம்பவ பருவத்தில் நெல் அறுவடை நடக்கிறது. நெல் அறுவடை இயந்திரங்கள் தேவை அதிகரித்துள்ளதால், சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை நடைபெறுகிறது. தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளிடம் அதிக வாடகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. எனவே நெல் அறுவடை இயந்திரங்கள் (சக்கர வகை) ஒரு மணிக்கு ரூ.1,600,செயின் வகை இயந்திரம் ரூ.2,400 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இதை விட விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் இயந்திரங்கள் குறித்து அந்தந்த பகுதி கோட்டாட்சியர், தாசில்தார், வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) விடம் 63792 75754, சிவகங்கை உதவி செயற்பொறியாளர் (பொறியியல் துறை) 82202 53460, காரைக்குடி உதவி செயற்பொறியாளர் 96553 04160 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அறுவடை இயந்திரங்கள் குறித்த விபரம், உழவன் செயலியில் உள்ளது. அதை பார்த்து அழைக்கலாம், என்றார்.

